பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் மீண்டும் ஆரம்பமான விமானப் பயணங்கள்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் மீண்டும் ஆரம்பமான விமானப் பயணங்கள்

மத்திய கிழக்கு நாடுகளுக்கான தனது விமானப் பயணங்களை மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மீண்டும் ஆரம்பிப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தன்படி, UL231 என்ற விமானம் கொழும்புவிலிருந்து டுபாய்க்கும், UL232 என்ற விமானம் டுபாயிலிருந்து கொழும்புக்குமாக இன்று புதன்கிழமை (04) இயக்கப்படவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் மீண்டும் ஆரம்பமான விமானப் பயணங்கள் | Flights Resume With Enhanced Security Precautionsடுபாய் வான்வழி பகுதியின் பகுதி திறப்பு இடம்பெற்றதைத் தொடர்ந்து, தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து முன்னுரிமையளித்து, நிலைமைகளை தொடர்ந்து கண்காணித்து அடுத்தடுத்த சேவைகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.

பயணிகள் தங்களது விமான அட்டவணை தொடர்பான சமீபத்திய தகவல்களை நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அல்லது வாடிக்கையாளர் சேவை மையங்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது