தங்க விலையில் திடீர் மாற்றம் - இலங்கையில் நகை வாங்க காத்திருந்தோருக்கான செய்தி
கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 407000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 376500 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடுகிறது.
இதேவேளை நேற்றைய தினம் (03.03.2026) கொழும்பு செட்டியார்தெருவின் தகவல்களின் படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 393000 ரூபாவாக பதிவாகியிருந்தது.
அத்துடன் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது 425000 ரூபாவாக காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது.
அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,171 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 84.63 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், சர்வதேச விலைக் குறைவு காரணமாக இன்று இலங்கையிலும் விலை குறைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.