நிலநடுக்கம் தொடர்பான ஆய்வு கண்டியில்..!
இலங்கையின் புவியியல் ஆய்வு மையத்தின அதிகாரிகள் சிலர் இன்று கண்டியின் பல பகுதிகளுக்கு சென்று அங்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் அசாதாரண நடுக்கம் குறித்து ஆய்வு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடுக்கம் பல்லேகெல நில நடுக்க மையத்தில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
கண்டி,அனுரகம,பாரகம,குரதெனிய தலாதுஓயா ஆகிய பகுதிகளில் இந்த நடுக்கம் உணரப்பட்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.