திடீரென குறைந்தது தங்கத்தின் விலை

திடீரென குறைந்தது தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி குறைவடைந்ததை அடுத்து, அமெரிக்கா குறைந்த வட்டி விகிதத்தை பராமரிக்க தீர்மானித்ததை அடுத்து இந்த விலை குறைவடைந்துள்ளது.

இதற்கமைய உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,975 அமெரிக்க டொலராக பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த வாரமளவில் முதல் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கம் 2,000 டொலராக அதிகரித்திருந்தது.

இதுவே தங்கத்தின் உயர்ந்த விலையாக கருதப்பட்டது. எனினும் தற்போது தங்கத்தின் விலை குறைந்துள்ளமை மக்களிடையே மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்லுவார்கள். ஒரு அவுன்ஸ் என்பது 32 கிராம், அதாவது நான்கு பவுன் ஆகும். இது 24 கரட் சொக்கத் தங்கமாகும்.