பிரான்சில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 7,379 தொற்றாளர்கள் அடையாளம்
கொரோனாவின் இரண்டாவது அலைக்கு முகங்கொடுத்து வரும் பிரான்சில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 7,379 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை 5,429 பேருக்கும், நேற்று முன்தினம் வியாழக்கிழமை 6,111 பேருக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து, நேற்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 7,379 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தின் பின்னர் ஒரே நாளில் பதிவான அதிகூடிய தொற்று இதுவாகும். அதேவேளை, கொரோனா தொற்று வீதம் இவ்வாரத்தில் 3.9% வீதமாக அதிகரித்துள்ளது
அங்கு இதுவரையில் கொரோனா தொற்று காரணமாக மொத்தமாக 30,500 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அங்கு முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் நாளாந்தம் புதிதாக 100 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதோடு, நேற்றைய நாளில் மாத்திரம் அங்கு 114 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மெல்பர்ன் நகரில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவானது மேலும் 6 வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது