தனிப்பட்ட தேவைகள் காரணமாக அழிவுப் பாதையில் செல்லும் ஐ.தே.கட்சி- அர்ஜூன ரணதுங்க
தமது தனிப்பட்ட தேவைகளுக்காக சிலர் செயற்பட்டு வருவதன் காரணமாக ஐக்கிய தேசிய கட்சி அழிவடைந்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜா-எல பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் தற்போதைய சூழ்நிலையில் கரு ஜயசூரிய கட்சியின் தலைமைத்துவத்திற்கு பொருத்தமானவர் எனவும் குறிப்பிட்டார்.