யாழ். கோண்டாவில் பகுதியை திடீரென சுற்றிவளைத்த ஏராளமான இராணுவம்

யாழ். கோண்டாவில் பகுதியை திடீரென சுற்றிவளைத்த ஏராளமான இராணுவம்

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் நேற்றிரவு இராணுவத்தினர் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் ஏராளமானவர்கள் கோண்டாவில் மேற்கு பகுதியில் குவிக்கப்பட்டு திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது அனைத்து வீதிகளிலும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் பிரிவினர் மற்றும் ஏராளமான இராணுவத்தினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் இந்த திடீர் சுற்றிவளைப்புக்கான காரணம் தெரியவரவில்லை.