கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி....!
கிளிநொச்சி முறிப்பு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக கிளிநொச்சி காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
முறிப்பு பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி உந்துருளியில் பயணித்த மூவரே குறித்த விபத்தில் சிக்கியுள்ளனர்.
உந்துருளி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் 18 வயது மதிக்கதக்க இரண்டு இளைஞர்கள் பலியாகியதுடன், 20 வயதுடைய மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.