கொரோனா காரணமாக உலக எண்ணெய் தேவையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச ரீதியாக பொருளாதாரம் பின்னடைவை எதிர் நோக்கியுள்ள நிலையில், உலக எண்ணெய் தேவை 9.1 மில்லியன் பரல்களால் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்னர் மதிப்பிடப்பட்டதை விட இது அதிக அளவிலான வீழ்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒப்பெக் என அழைக்கப்படும் எண்ணெய் உற்பத்தியினை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு 4 சத வீதத்தால் இந்த ஆண்டு வீழ்ச்சியை எதிர்நோக்க வேண்டி வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் சர்வதேச ரீதியாக மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், இந்த நிலை மேலும் சிக்கலை ஏற்படுத்தலாம் என ஒப்பெக் தெரிவித்துள்ளது.
அதேவேளை, முன்னணி அபிவிருத்தி நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகள் மட்டுபடுத்தப்படும் நிலையில், எண்ணெய் தேவை 90.6 மில்லியன் பீப்பாயாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் வர்த்தக எண்ணெய் கையிருப்பு அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஒப்பெக் இன் கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.