யாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை

யாழில் திடீரென 30 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை

யழ்ப்பாணம் - சாவகச்சேரி - உதயசூரியன் கிராமத்தில் 30 பேருக்கு திடீரென நேற்று காலை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகரசபையில் சுகாதாரத் தொழிலாளர்களாகப் பணி புரியும் 30 பேருக்கே சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் இப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

தென்மராட்சியில் மொத்தமாக 180பேருக்கு இப் பரிசோதனை மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் முதற்கட்டமாக நாவற்குழிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அடுத்த வாரம் மட்டுவில் கிராமத்தில் கொவிட் -19 பரிசோதனை மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா சமூகப் பரவலைக் கண்காணிக்கும் நோக்கில் சமூகத்தோடு நெருக்கமாகப் பழகுபவர்கள் மற்றும் கல்வி அறிவு வீதம் குறைந்த சமூக மக்களிடையே இப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.