22 மாதங்களில் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக சாதனை வருமானம்!

22 மாதங்களில் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக சாதனை வருமானம்!

2025 ஜனவரி மாதம் முதல் 2026 ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பிலிருந்து ஈட்டப்பட்டுள்ள மொத்த வருமானம் 27,581.40 மில்லியன் ரூபாய் எனப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (28) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்படி, கொட்டாவையிலிருந்து மத்தள வரை செல்லும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து குறித்த காலப்பகுதியில் 11,486 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

அத்துடன், மீரிகமையிலிருந்து குருநாகல் வரை செல்லும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து 7,282 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

பேலியகொடையிலிருந்து கட்டுநாயக்க வரை செல்லும் அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து குறித்த காலப்பகுதியில் 2,560.05 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த மூன்று அதிவேக நெடுஞ்சாலைகளிலிருந்து மாத்திரம் ஈட்டப்பட்டுள்ள மொத்த வருமானம் 21,328.05 மில்லியன் ரூபாயாகும்.

இதற்கு மேலதிகமாக, வெளிச் சுற்றுவட்ட நெடுஞ்சாலையிலிருந்து குறித்த காலப்பகுதியில் 6,251 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்படி, 2025 ஜனவரி மாதம் முதல் 2026 ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பிலிருந்து ஈட்டப்பட்டுள்ள மொத்த வருமானம் 27,581.40 மில்லியன் ரூபாய் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.