2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 4ஆம் திகதி ஆரம்பம்! கல்வி அமைச்சு அறிவிப்பு – வெளியானது முழுமையான தவணை அட்டவணை!

2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 4ஆம் திகதி ஆரம்பம்! கல்வி அமைச்சு அறிவிப்பு – வெளியானது முழுமையான தவணை அட்டவணை!

இலங்கையில் 2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2027ஆம் ஆண்டின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான தவணை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் சுற்றறிக்கை இலக்கம் 31/2026இன் அடிப்படையில், 2027ஆம் ஆண்டில் மொத்தம் 197 பாடசாலை நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான தவணை விபரங்கள்:

  • முதலாம் தவணை: 2027 ஜனவரி 4 முதல் ஏப்ரல் 9 வரை.

  • இரண்டாம் தவணை: 2027 ஏப்ரல் 26 முதல் ஜூலை 30 வரை.

  • மூன்றாம் தவணை: 2027 ஆகஸ்ட் 30 முதல் டிசம்பர் 3 வரை.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான தவணைகள் ரமழான் காலம் உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டு பல கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, முதலாம் தவணையின் முதல் கட்டம் ஜனவரி 4ஆம் திகதி ஆரம்பமாகி பெப்ரவரி 5ஆம் திகதி நிறைவடைகிறது.

மேலும், 2027ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதத்திலும், சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதத்திலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள், விடுமுறை காலங்கள் மற்றும் பரீட்சைகளை ஒழுங்குபடுத்தும் வகையில் இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் 2027ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள முடியும்.