நண்பியுடன் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்; கோர வி*பத்தில் ஒருவர் ப**லி – சாரதிகள் கைது!
இலங்கையில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 24ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே நாடாளுமன்ற மைதானத்திற்கு முன்னால் உள்ள வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ராஜகிரியிலிருந்து பெலவத்தையை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர்த் திசையில் வந்த இரண்டு வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளின் பின்புற இருக்கையில் பயணித்த 26 வயதுடைய மெத்மி கவிந்தி வீரசிங்க என்ற இளம் பெண் உயிரிழந்துள்ளார்.
கொஸ்வத்த பிராந்திய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளை செலுத்திய மற்றைய இளம் பெண் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், விபத்துடன் தொடர்புடைய வாகனங்களின் சாரதிகளை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.