ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம்... A9 வீதியில் கோர விபத்து! சம்பவ இடத்திலேயே இருவர் ப***லி.
யாழ்ப்பாணம் – கண்டி ஏ-9 பிரதான வீதியின் மெதவாச்சிய, பியூஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தும், வவுனியாவிலிருந்து மஹவ நோக்கிச் சென்ற காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கார் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
விபத்தின்போது காரில் மூவர் பயணித்துள்ள நிலையில், படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரில் பயணித்த ஏனைய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் பலல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய அகில மற்றும் 34 வயதுடைய சுமித் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.