வரி செலுத்துவோர் அடையாள எண்கள் (TIN) குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

வரி செலுத்துவோர் அடையாள எண்கள் (TIN) குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமான வரி செலுத்துவோருக்கு வரி செலுத்துவோர் அடையாள எண்கள் (TIN) வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

சுமார் ஐந்து மில்லியன் மக்கள் தங்களுக்கான வரி அடையாள எண்களைப் பெறுவதற்காகக் காத்திருக்கின்றனர்.

 

அடையாள எண்கள்

உள்நாட்டு வருவாய் திணைக்களம் (Inland Revenue Department), வரி அடையாள எண்களை விண்ணப்பதாரர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கும் நடைமுறையை இதுவரை மேற்கொள்ளவில்லை.

வரி செலுத்துவோர் அடையாள எண்கள் (TIN) குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு! | Announcement Regarding Tin Numbers

இதனால் தங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை அறிய முடியாமல் வரி செலுத்துவோர் பெரும் குழப்பத்திற்கும் சிரமத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.

தங்களது வரி அடையாள எண் நிலையை அறிந்துகொள்ள விரும்புவோர், உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்திற்குச் சென்று தமது தேசிய அடையாள அட்டை (NIC) எண்ணைப் பயன்படுத்திச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.