பாக்யராஜ் உடலைச் சுற்றி வந்து கலங்கிய வளர்ப்பு நாய்!

பாக்யராஜ் உடலைச் சுற்றி வந்து கலங்கிய வளர்ப்பு நாய்!

இந்நிகழ்வு அங்கிருந்தவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

 பிரபல இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் நேற்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73.

பாக்யராஜின் உடல், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அப்போது, அவரது வளர்ப்பு நாய் செய்த செயல் அங்கிருந்த அனைவரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தியது. தன் எஜமானரின் உடலை விட்டுப் பிரிய மனமில்லாமல், சோகத்துடன் அவரது முகத்தையே பார்த்தவாறு அந்த நாய் நின்றது. 

மேலும், உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டியை அது தொடர்ந்து சுற்றிச் சுற்றி வந்து தனது பாசப் போராட்டத்தைக் காட்டியது.

வளர்ப்பு நாயின் இந்த நெகிழ்ச்சியான பாச உணர்வு, அங்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த பொதுமக்களையும் திரையுலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.