ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்ற விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
ஈரான், தனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றாத கப்பல்களின் பயணம் பாதுகாப்பாக இருக்காது என்று எச்சரித்து வருகிறது.
வடக்கு - தெற்கு பாதை பிரச்சனை
அமெரிக்கா, ஓமான் மற்றும் பல சர்வதேச தரப்புகள் ஓமானின் கடற்கரையை ஒட்டிய தெற்கு வழித்தடம் (Southern Corridor) வழியாக கப்பல்கள் சுதந்திரமாகச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
ஈரான் தனது கடற்கரையை ஒட்டிய வடக்கு வழித்தடம் (Northern Corridor) வழியாகவே கப்பல்கள் செல்ல வேண்டும் என்றும், அந்தப் பயணங்கள் ஈரானின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும் கப்பல் குறித்து முன்கூட்டிய தகவல் தரனும் என ஈரான் IRGC அதிகாரிகளுக்கு கூறவேண்டும் என்று வலியுறுத்துகிறது.
அப்படி ஏன் கூற வேண்டும்?
இந்த கட்டுப்பாட்டை பல கப்பல் நிறுவனங்களும், மேற்கத்திய நாடுகளும் இதை ஏற்கவில்லை.
ஹோர்முஸ் நீரிணை ஒரு சர்வதேச கடற்பாதை என்பதால், சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்றே அவர்கள் வாதிடுகின்றனர்.
ஒவ்வொரு கப்பலும் ஈரானிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் அல்லது அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை அவர்கள் நிராகரிக்கின்றனர்.
இதனால் இரண்டு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றாமல் இருப்பதால், எந்தக் கப்பல் எந்தப் பாதையில் செல்கிறது என்பதே தற்போது பாதுகாப்பு மற்றும் அரசியல் பதற்றத்தின் முக்கிய காரணமாக மாறியுள்ளது.
நேற்று முன்தினம் ஈரான் சிங்கப்பூர் சரக்கு கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது, இன்று மதியமும் ராங்கர் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனின் இது ஈரானா என்பது குறித்து விசாரணை இடம்பெறுகிறது.
போர்நிறுத்த பேச்சுவர்த்தை நடந்தும் இந்த ஹோர்முஸ் பாதையால் மீண்டும் பதற்றம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.