கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த சுப்பிரமணியன் எனும் நாயை தாக்கியவர் கைது

கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த சுப்பிரமணியன் எனும் நாயை தாக்கியவர் கைது

கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற சுப்பிரமணியன் எனும் நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபரை கல்முனை தலைமையக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளதுடன் கல்முனை தலைமையக காவல் நிலைய பிரதம பரிசோதகருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில்  21 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கதிர்காம பாதயாத்திரை

குறித்த நாய் யாழில் இருந்து கதிர்காம பாதயாத்திரையில் ஈடுபட்டு வரும் குழுவினரோடு பயணித்து வரும் சுப்பிரமணியன் எனும் பெயருடைய நாய் என்பதாகும்.

கதிர்காம பாதயாத்திரையில் பயணித்த சுப்பிரமணியன் எனும் நாயை தாக்கியவர் கைது | Man Arrested Attacking Dog Kataragama Padayatra

மேலும் இன்று கல்முனை பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரினால் தாக்கப்பட்டுள்ளமை மனிதாபிமானமற்ற செயலாகும் என இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

சுமார் 450 கிலோ மீற்றர் தூரம் பயணித்து வந்த குறித்த சுப்பிரமணியன் எனும் நாய் தாக்கப்பட்டமை சமூக ஊடகங்களில் வைரலானதுடன் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.