மழை, இடியுடன் கூடிய காலநிலை ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

மழை, இடியுடன் கூடிய காலநிலை ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கிழக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மழை, இடியுடன் கூடிய காலநிலை ; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை | Today Weather Meteorological Department Warning

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

ஏனைய கடற்பரப்புகளில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிலாபத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளிலும், காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் மணிக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படுவதால் கடற்றொழிலாளர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.