இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை மீள் ஏற்றுமதி செய்யத் திட்டமா..! வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை மீள் ஏற்றுமதி செய்யத் திட்டமா..! வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்

நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் விதித்துள்ள விதிமுறைகளை மீறி, போலியான உற்பத்தி திகதிகளை பதிவு செய்து இலங்கைக்கு வாகனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 196 வாகனங்களை மீள் ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பொய்யானது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை மீள் ஏற்றுமதி செய்யத் திட்டமா..! வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல் | Vehicle Import In Sri Lanka Vehicle Price Today

நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மீள் ஏற்றுமதிக்கான எந்த தயாரிப்புகளும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார். 

இலங்கையில் ஐந்து வருடங்களுக்குப் பிறகு புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.