
இறுதிச் சடங்கிற்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்த கதி
நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவுல - பகமுன வீதியில் மொரகஹகந்த பகுதியில், முன்னால் பயணித்த லொறியின் பின்புறத்தில் மற்றொரு சிறிய லொறியொன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (11) அதிகாலையில் நிகழ்ந்துள்ளதுடன் உயிரிழந்த தம்பதி ஹிங்குராக்கொட பகுதியில் வசிக்கும் 47 வயதுடைய ஆண் மற்றும் 41 வயதுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொங்கஹவெல பகுதியில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது இந்த விபத்தை சந்தித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்துக்குப் பிறகு, சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி லொறியுடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.