அதிகளவு மாத்திரையை உட்கொண்ட மாணவி பலி

அதிகளவு மாத்திரையை உட்கொண்ட மாணவி பலி

நல்லதண்ணி பொலிஸ் பிரிவின், மறே தோட்டத்தில் நேற்று(10) பாடசாலை மாணவி ஒருவர் அதிக மாத்திரைகளை விழுங்கி உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் வாய் பகுதியில் நுரை வருவதை கண்ட பெற்றோர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க கொண்டு செல்லும்போதே சிறுமி உயிரிழந்துள்ளாரென மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகளவு மாத்திரையை உட்கொண்ட மாணவி பலி | Student Dies After Taking An Overdose Of Pillsமாணவியின் சடலம் இன்று டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உடற் கூற்று பரிசோதனைக்கு பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.