பேருந்திலிருந்து விழுந்த முதியவர் மரணம்: விசாரணைகள் ஆரம்பம்

பேருந்திலிருந்து விழுந்த முதியவர் மரணம்: விசாரணைகள் ஆரம்பம்

ருவன்வெல்ல ஹம்பஸ்வலன பகுதியில் ருவன்வெல்லவிலிருந்து டன்னோருவ நோக்கி பயணித்த பயணிகள் பேருந்தின் முன்பக்க மிதி பலகைக்கு அருகில் பயணித்த ஒருவர் நேற்று (10) பேருந்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

விபத்தைத் தொடர்ந்து அவர் கவலைக்கிடமான நிலையில் கரவனெல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பேருந்திலிருந்து விழுந்த முதியவர் மரணம்: விசாரணைகள் ஆரம்பம் | Elderly Man Dies After Falling From Busஉயிரிழந்தவர் ஹம்பஸ்வலனை, ருவன்வெல்ல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்ட விசாரணையில், இறந்தவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மிதி பலகையில் இருந்து தவறி விழுந்ததாகவும் தெரியவந்துள்ளது.

சடலம் கரவனெல்ல மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.