இன்று முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை

இன்று முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை

இன்று (11) நள்ளிரவு முதல் கல்விப் பொதுதராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய சகல கற்பித்தல் செயற்பாடுகளும் தடைசெய்யப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், சமூக ஊடகங்கள் அல்லது பிற இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் பரீட்சைக்கான பயிற்சிகளை வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை | Ban On Additional Classes In O L From Todayஅதேவேளை இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.