
மாணவர்களை பிரம்பால் தாக்கிய டியூஷன் ஆசிரியர்: பொலிஸார் தீவிர விசாரணை
தனியார் உயர்தர வகுப்பு ஆசிரியர் ஒருவர் மாணவர்களை பிரம்பால் தாக்கிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நுகேகொடை மற்றும் கம்பஹா போன்ற பகுதிகளில் வணிக பிரிவில் கல்வி கற்பிக்கும் குறித்த ஆசிரியர், தனது தனியார் வகுப்புகளில் மாணவர்களை பிரம்பால் அடிக்கும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
ஆசிரியரால் தாக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரித்து வருவதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 18 வயதுக்குட்பட்டவர்கள் சிறுவர்கள் என்று கருதப்படுகிறார்கள்.
உயர்தர வகுப்புகளில் படிக்கும் சில மாணவர்கள் 19 வயதை பூர்த்தி செய்துள்ளதால், சட்டத்தை செயல்படுத்துவதில் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபைக்கு சிக்கல்கள் உள்ளதாக இதன் போது குறிப்பிட்டுள்ளார்.