தொடருந்து திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

தொடருந்து திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தினை முன்னிட்டு விசேட தொடருந்து சேவையினை முன்னெடுப்பதற்குத் தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையிலும், கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலும் விசேட தொடருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடருந்து திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு | Special Announcement Issued By Railway Departmentஇதன்படி, முதலாவது தொடருந்து எதிர்வரும் 12, 14, 16, 21, 23, 28 மற்றும் 31 திகதிகளில் இரவு 7.30 இற்கு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்கவுள்ளது.

இரண்டாவது தொடருந்து குறித்த தினங்களில் மாலை 5.20 இற்கு பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணிக்கவுள்ளது.

மூன்றாவது தொடருந்து எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நாளாந்தம் காலை 5.30 இற்கு கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கும், நான்காவது தொடருந்து குறித்த தினங்களில் பிற்பகல் 1.50 இற்கு காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டைக்கும் சேவையினை முன்னெடுக்கவுள்ளது.