![](https://yarlosai.com/storage/app/news/9498f7388cd276c196d5bd15bbf911a5.png)
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மீள்பரிசீலனை : வெளியான தகவல்
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளது.
இதன்படி இன்றுடன் (06) கால அவகாசம் நிறைவடையவுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 23 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இதனடிப்படையில், பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களை 27 ஆம் திகதி முதல் முதல் பெப்ரவரி ஆறாம் திகதி வரை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த விடயத்தை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) தெரிவித்திருந்தார்.
அத்தோடு, பெறுபேறுகளை மீள் பரிசீலனைக்காக இணையவழி முறைமையின் மூலம் விண்ணப்பிக்க முடியும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.