இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, நேற்றைய தினம் 295.51 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று (06) 294.50 ருபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்நிலையில், 304.13 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி இன்றைய தினம் 303.17 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 366.37 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 380.32 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 304.32 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 316.78 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 204.25 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 212.89 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182.87 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 192.17 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.