தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை; நகைப்பிரியர்கள் கவலை
கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில் சென்னையில் (6) இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் ஒரு சவரன் 64 ஆயிரத்தை நெருங்கி இருப்பதாகவும் கூறப்படுவது நகைப்பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை கடந்த நான்கு நாட்களாக தொடர் ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில் இன்னும் அதிகமாக உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 25 ரூபாய் உயர்ந்து 7,930 என விற்பனையாகிறது.
அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 200 ரூபாய் உயர்ந்து விலை ரூபாய் 63,440 என விற்பனையாகி வருகிறது.
24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,650 எனவும் ஒரு சவரன் ரூபாய் 69,200 எனவும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளியின் விலை
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 107.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 107,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.