பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண்ணொருவர் விபத்துக்குள்ளான நிலையில் காயமடைந்துள்ளார். 

எல்ல பசறை வீதியில் அமைந்துள்ள சிறிய ஸ்ரீ பாதைக்கு இன்று சென்ற போது கீழே தவறி விழுந்து பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

33 வயதுடைய பிரித்தானிய நாட்டுப் பெண்ணொருவரே காயமடைந்துள்ளார். காயமடைந்த பெண் அம்புலன்ஸ் மூலம் பதுளை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சுற்றுலா பெண்ணுக்கு காலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.