இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிக்கிய 76 அரச அதிகாரிகள்
2025 இல் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் 76 அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் காவல்துறை அதிகாரிகள் என்று அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, மொத்தம் 24 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் முன்னெடுக்கப்பட்ட 119 சோதனை நடவடிக்கைகளின் போது இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 2025 நவம்பர் வரையிலான காலகட்டத்தில் ஊழல் மற்றும் மோசடிக்காக 7 அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு இந்த 11 மாதங்களில் மொத்தம் 7,811 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.