ஆறாம் தர ஆங்கில மொழிப் பாடப் புத்தக விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

ஆறாம் தர ஆங்கில மொழிப் பாடப் புத்தக விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

சர்ச்சைக்குரிய தரம் ஆறு ஆங்கிலப் பாடக் கற்றல் தொகுதியை (Module) அச்சிடுவதற்காக 61 மில்லியன் ரூபாவுக்கும் அண்மித்த நிதி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெ தெரிவித்துள்ளார்.

ஆறாம் தர ஆங்கில மொழிப் பாடப் பயிற்சிப் புத்தகத்தில் பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர் இடம்பெற்றிருந்தமை பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருந்தது.

இந்தநிலையில், புத்தகத்தை மீண்டும் அச்சிடுவதா அல்லது செலவைக் குறைக்கும் மாற்று நடவடிக்கையொன்றுக்குச் செல்வதா என்பது குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதா என செயலாளரிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

ஆறாம் தர ஆங்கில மொழிப் பாடப் புத்தக விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை | Sri Lanka Spends Rs 61M On Grade 6 Module

இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்படி விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், குறித்த கற்றல் தொகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய பக்கத்தை மாத்திரம் நீக்கிவிட்டு விநியோகிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.