இலங்கையில் வாகன விற்பனை பெருமளவு வீழ்ச்சி : வெளியான தகவல்
டிசம்பர் மாதத்தில் டிட்வா சூறாவளி ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக, வாகன விற்பனை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் வாகன இறக்குமதிப் போக்கு மற்றும் வாகனச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த உத்தியோகபூர்வ தரவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, 2025 ஒக்டோபர் மாதத்தில் 2,157 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்ட மொத்த இறக்குமதிச் செலவு, நவம்பர் மாதத்தில் 1,779 மில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது.
மொத்த இறக்குமதி குறைந்த போதிலும், தனிப்பட்ட வாகன இறக்குமதிக்கான செலவு நவம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒக்டோபரில் 205.6 மில்லியன் டொலர்களாக இருந்த வாகன இறக்குமதிச் செலவு, நவம்பர் மாதத்தில் 227.6 மில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.
2025 நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில், இலங்கை மொத்தம் 1,365.8 மில்லியன் டொலர் பெறுமதியான தனிப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது.
இந்தநிலையில் வாகனக் கொள்வனவுக்கான கடன் வசதிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய வங்கி கடன்-பெறுமதி விகிதங்களை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.