இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்திய பெருங்கடலில் தென்னாபிரிக்காவுக்கு தெற்கே இன்று (10) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

தென்னாப்ரிக்கா - கேப் டவுன் நகரத்தில் இருந்து 2,500 கி.மீ. தொலைவில் கடலின் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.7 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.

இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் | Powerful Earthquake In The Indian Ocean

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இதேவேளை இந்தியாவிலும் ஆங்காங்கே சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு வருவது, மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.