உத்தரபிரதேசத்தில் கோர விபத்து - பரிதாபமாக18 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் கோர விபத்து - பரிதாபமாக18 பேர் பலி

உத்தரபிரதேச (Uttar Pradesh) மாநிலம் உன்னாவ் (Unnao) நகரில் பேருந்து விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்தானது லக்னோ (Lucknow) ஆக்ரா (Agra) நெடுஞ்சாலையில், பீகாரில் (Bihar) இருந்து டெல்லி (Delhi) நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தானது பின்னால் வந்த லாரி மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உத்தரபிரதேசத்தில் கோர விபத்து - பரிதாபமாக18 பேர் பலி | Accident In Uttar Pradesh 18 People Died

இந்தநிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று பெண்களும் ஒரு சிறு குழந்தையும் அடங்குவதாக காவல்துறையினர்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.