தென்னிந்திய இசை நிகழ்ச்சியை சோகத்தில் ஆழ்த்திய ஈழத்து பெண்!

தென்னிந்திய இசை நிகழ்ச்சியை சோகத்தில் ஆழ்த்திய ஈழத்து பெண்!

தென்னிந்தியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜி தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப இசை நிகழ்ச்சி சாமானிய மக்களின் கனவு நினைவாகி அவர்களின் இசை திறமை உலகறிய செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறான நிலையில் சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம் அர்ப்பணிப்பு சுற்று (Dedication Round) நடைபெற்று முடிந்துள்ளது.

தென்னிந்திய இசை நிகழ்ச்சியை சோகத்தில் ஆழ்த்திய ஈழத்து பெண்! | Sa Re Ga Ma Pa Eelam Girl Saranga Sad Moment

தங்களுக்கு பிடித்த உறவுகளுக்காக ஒவ்வொரு போட்டியாளர்களும் பாடல் பாடினார்கள்.

இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து சென்ற சாரங்கா ஒட்டுமொத்த புலம் பெயர் தமிழர்களுக்காகவும் மேடையில் பாடினார்.

அவர் பாடி முடிந்த பிறகு தனது உறவுகளை நினைத்து மேடையில் கதறி அழுதார்.

தென்னிந்திய இசை நிகழ்ச்சியை சோகத்தில் ஆழ்த்திய ஈழத்து பெண்! | Sa Re Ga Ma Pa Eelam Girl Saranga Sad Moment

மேலும் அதுமட்டுமின்றி, சுவிஸில் வாழ்ந்தாலும் நான் ஈழத்து பெண் என்று கூறுவதில் தான் மகிழ்ச்சி எனவும், நான் பாடுவது ஈழத்து மக்களுக்கு தான் எனவும் சாரங்கா குறிப்பிட்டார்.

வீடியோ காலில் அவரின் குடும்பத்தினர் தொடர்பு கொண்டனர். இதன் போது ஒவ்வொரு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போதும் உறவுகளுக்காக எழுச்சி பாடல் பாடுவதை சாரங்கா 7 வயதில் இருந்து வழக்கமாக வைத்திருப்பதாக அவரின் தந்தை கூறியது அனைவருக்கும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.

இது தொடர்பான காணொளிகள் தற்போது இணையத்தினை வைரலாகி வருகின்றது.