பிரதமராக பதவியேற்கும் மோடி ; பின்னணியில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

பிரதமராக பதவியேற்கும் மோடி ; பின்னணியில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

 மீண்டும் ஜூன் 9ஆம் திகதி மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் பதவி ஏற்க இருக்கிற நிலையில் மோடியின் பதவியேற்பின் பின் அவரின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்க போகின்றது என்ற நெடிசன்களின் கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மோடி அவரது பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக, அரசியலமைப்பிற்குள் பொதிந்துள்ள விழுமியங்களை மேம்படுத்துவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிப்பதாக அவர் வலியுறுத்தி தனது அதிகாரபூர்வ X தளத்தில் அரசியலமைப்பின் முன் தலைவணங்கும் படத்தைப் பதிவிட்டுள்ளார்.

இந்த படத்திற்கு சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட கருத்துகள் பின்வருவாறு அமைந்துள்ளது.

பிரதமராக பதவியேற்கும் மோடி ; பின்னணியில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் | Modi Office Prime Minister Background Information

தமிழ்நாடு எம்பிக்கள் நாற்பது பேரும் நாடாளுமன்ற கேன்டீனில் சமோசா சாப்பிடத் தான் போகிறார்கள் என்று நையாண்டி செய்பவர்களுக்கு பதில்.

அரசமைப்புச் சட்டம் திருத்தப்படும் என்று கொக்கரித்தவர்களை, அதே அரசமைப்புச் சட்டத்தை வணங்கும்படி செய்வார்கள். மாநில நலன்களையும் கவனிக்க வேண்டும் என்ற திமுகவின் குரலை நாயுடுகாரு மூலமாக பேச வைப்பார்கள்.

மதவெறியை ஊட்ட மாட்டோம் என்று மோடியை உறுதி அளிக்க வைப்பார்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற நகைச்சுவைகளை இனிமேல் மோடி பேசாதவாறு காவல் காப்பார்கள்.

நிர்மலா சீதாராமன் வகையறாக்களின் திமிர் பேச்சுகளைத் தடுத்து நிறுத்துவார்கள்.

இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு கூடாது என்று கொக்கரித்தவர்கள் மூலம் அதே இட ஒதுக்கீடு தொடரச் செய்வார்கள்.

பாஜகவின் 240 எம்பிக்கள் செய்வதை விட இன்னும் அதிகமாக சாதிப்பார்கள் என்ற கருத்தே சமூகத்தளத்தில் பதிவிட்டுள்ளது.