நல்லூர் வருடாந்த மகோற்சவத்தில் இராணுவத்தினர் கடமையில் ?

நல்லூர் வருடாந்த மகோற்சவத்தில் இராணுவத்தினர் கடமையில் ?

நல்லூர் வருடாந்த மகோற்சவத்தில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த வாரம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் ஓகஸ்ட் 3ஆம் திகதி தொடக்கம் பொலிஸார் தேர்தல் கடமைக்கு அமர்த்தப்படவுள்ளனர்.

இதனையடுத்தே நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவத்தில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள பொலிஸாரில் மூன்றில் இரண்டு பகுதியினர் மீளப்பெறப்பட்டு இராணுவத்தினர் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றும் ஒரு வாரத்துக்கு இந்த நடைமுறை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.