கணவருடன் முட்டை தகராறு; பெண் தற்கொலை

கணவருடன் முட்டை தகராறு; பெண் தற்கொலை

முட்டைக்காக ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் அனில் குமார் (வயது 35). இவரது மனைவி பூஜா. இந்த தம்பதி பெங்களூரு பகுதியில் வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர்.

கணவருடன் முட்டை தகராறு; பெண் தற்கொலை | Egg Dispute With Husband Wife Jump Building

அனில்குமார், பூஜா இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு உணவு சாப்பிடும்போது அனில் குமார், தனக்கு கூடுதல் முட்டை வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு பூஜா மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் பூஜாவை அனில் குமார் திட்டியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த பூஜா, மாடியில் இருந்து குத்தித்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் இடத்திற்கு வந்த பொலிஸார் பூஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.