அருட்தந்தையின் மனிதாபிமான செயற்பாடு -பயனடையவுள்ள பெருமளவான நோயாளர்கள்
தற்போதைய கோவிட் 19 நெருக்கடியான சூழலில் அருட் தந்தை ஒருவர் யாழ்.போதனாவைத்தியசாலைக்கு தேவையான சாதனமொன்றை கையளித்து பெருமை சேர்த்துள்ளார்.
மதிப்பிற்குரிய அருட்தந்தை எஸ்.எம். செல்வரட்ணம் அடிகளாரே தனது சொந்த முயற்சியினால் வெளிநாடுகளிற்கு சென்று விரிவுரைகள் நடத்தி அதில் சேமித்த பணத்தை ஒர் நல்ல காரியத்திற்காக செலவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு தனது உயரிய நோக்கத்தை தெரிவித்தார்.
அதற்கு அமைவாக சுமார் 58 இலட்சம் பெறுமதியான ultrasound scanner இயந்திரத்தினை வைத்தியசாலை சுவாசத்தொகுதி பிரிவினருக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இந்நிகழ்வினை வைத்தியசாலை நலன்புரிச்சங்க பொருளாளர் வைத்தியநிபுணர் பிரேமகிருஸ்ணா ஒருங்கிணைத்தார்.
இந்த சாதனம் கையளிக்கும் நிகழ்வில் போதனா வைத்தியசாலை சுவாசத்தொகுதி வைத்தியநிபுணர் ஆதவன் மற்றும் வைத்தியசாலை நலன்புரிச்சங்க செயளாளர் ,தாதிய பரிபாலகர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
தற்போதைய கோவிட் 19 நிலைமைகளில் இவ்வாறான நல்லுள்ளம் படைந்த இவர்களைப் போன்ற கொடையாளிகளுக்கு வைத்தியசாலை சமுகம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.