யாழ்ப்பாணத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை

யாழ்ப்பாணத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை

யாழ்ப்பாணத்தில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக சங்கானையில் பனைமரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

யாழப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது.

யாழ்ப்பாணத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை | Heavy Rain In Jaffna

இந் நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை பலத்த காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதன்போது சங்கானை 07ஆம் கட்டையிலுள்ள தனியார் காணியொன்றில் நின்ற பனை மரம் திடீரென முறிந்து வீழ்ந்துள்ளது. இதனால், இரு மின்கம்பங்கள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அப்பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.