இன்றைய ராசி பலன் 02 மே 2023

இன்றைய ராசி பலன் 02 மே 2023

இன்று செவ்வாய் கிழமை மே 2ம் தேதி. இன்று கன்னி ராசியில் சஞ்சரிக்க உள்ள சந்திரன் சில மோசமான பலனைத் தர வாய்ப்புள்ளது. சந்திரன், மற்ற கிரகங்களின் அமைப்பு காரணமாக மகரம், விருச்சிகம் உள்ளிட்ட ராசிகளுக்கு மிகவும் சிறப்பான இருக்கும். 12 ராசிகளுக்கு பலன் எப்படி இருக்கும் பார்ப்போம்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெரிய அளவில் பணம் கிடைக்கும் நாளாக இருக்கும். நீங்கள் மிகவும் திருப்தி அடைவீர்கள். உங்கள் எதிர்காலத்தைப் பற்றிய கவலையிலிருந்து விடுபடுவீர்கள். மாலையில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தின் பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

எந்த ஜாதக அமைப்பு இருந்தால் திருமணம் செய்யக் கூடாது? எப்போது கல்யாணம் செய்யக்கூடாது?

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் இன்று ஒழுங்கற்ற உணவுப் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். இன்று உங்கள் வருமானம் குறைவாகவும், செலவுகள் அதிகமாகவும் இருக்கும். இன்று விருந்து, விழாக்களில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் இன்று நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

கடகம் முதல் விருச்சிகம் வரை: தனக்கென உறுதியான நிலைப்பாட்டை எடுக்காத ராசிகள்

மிதுனம்

மிதுனம்

 

மிதுனம் ராசிக்காரர்கள் இன்று சில முக்கிய வேலைகளை செய்து முடிப்பார்கள். இன்று உங்கள் குடும்பத்தில் தகராறு ஏற்படலாம். அதனால் எந்த ஒரு சர்ச்சையில் ஈடுபடுவதோ, பேச்சில் கடுமையோ வேண்டாம். இன்று உங்களின் சில திட்டங்களை நிறைவேற்ற உங்கள் சகோதரரின் ஒத்துழைப்பை நாட வேண்டியிருக்கும். வருவாய் சிறப்பாக இருக்கும்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் இன்று வியாபாரம் சம்பந்தமாக பயணம் செய்ய வேண்டி இருக்கும். ஆனால் அதில் அனுகூல வாய்ப்பு குறைவாக இருக்கும். அனுபவம் வாய்ந்த ஒருவரிடமிருந்து ஆலோசனையைப் பெறுவது நல்லது. இன்று பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக சில மனக்கசப்புகள் ஏற்படும். இன்று தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். மாணவர்களுக்கு சாதக நாள்.

சிம்மம்

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் காதல் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் பரஸ்பர ஆதரவையும் காண்பீர்கள். இன்று ஆரோக்கியம் உங்களுக்கு சாதகமாக இருக்கும், பல்வேறு செயல்களில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். இன்று குடும்பத் தொழிலில் உங்கள் பெரியவர்களின் ஆலோசனை உங்களுக்குத் தேவைப்படும். இது எதிர்காலத்தில் உங்களுக்கு மகத்தான பலன்களைத் தரும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று எந்த சூழ்நிலையிலும் மிகவும் தீவிரமாக சிந்தித்து முடிவெடுப்பார்கள். நீங்கள் முதலீடு செய்ய நல்ல நாள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பேஷன், கலை மற்றும் கல்வித் துறையில் பணிபுரிபவர்கள் இன்று வெற்றி பெறுவார்கள். இன்று, குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை பலவீனமடையக்கூடும், இதனால் சில சிரமங்கள் ஏற்படக்கூடும், இந்த விஷயத்தில் பணம் அதிகமாக செலவிட வேண்டியிருக்கும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கலவையான நாளாக இருக்கும். இன்று தொழில், வியாபாரத்தில் எதை செய்தாலும் நீங்கள் முழு பலன்களைப் பெறுவீர்கள். தனிப்பட்ட குடும்ப உறவில் விரிசலை உருவாக்க சிலர் முயற்சி செய்ய வாய்ப்புள்ளது. குடும்பத்தின் அனைத்துப் பொறுப்புகளையும் வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். மாலையில் குடும்ப உறுப்பினர்களுடன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். இன்று தந்தையின் உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இன்று உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அலைக்கழிக்கப்பட்டாலும் தைரியமாக செய்யும் எந்த வேலையிலும் வெற்றி கிடைக்கும். இன்று உங்கள் எதிரிகள் பணியிடத்தில் சில பிரச்சனைகளை உருவாக்கலாம், இருப்பினும் அவர்களை சிறப்பான எதிர்கொள்வீர்கள். நீங்கள் சுற்றலாம், வழிபாடு என எங்காவது செல்ல திட்டமிட்டிருந்தால், நீங்கள் அதில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்று பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று நிதி விஷயங்களிலும் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்று உங்கள் வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். குடும்பத்தில் ஏதாவது டென்ஷன் இருந்திருந்தால் இன்று குறையும். இன்று எந்தவித வாக்குவாத சூழ்நிலையையும் தவிர்க்க வேண்டும். இன்று, மற்றவர்களின் வேலைக்காக அதிக நேரத்தையும் சக்தியையும் வீணாக்காதீர்கள்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று பல முக்கிய மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் சில கடினமான நேரங்களைக் கடக்க வேண்டியிருக்கலாம். பொறுமையாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம். சமூகத்தில் மரியாதை கூடும். நீங்கள் கடன் வாங்கும் முயற்சியில் இருந்தால், அந்த கடன் தேவையா என குடும்ப உறுப்பினர்களுடன் சரியான ஆலோசனை பெறுவது அவசியம். இன்று வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் சிறிது குறைவு ஏற்படலாம்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன உளைச்சல் அதிகமாக இருக்கும். இன்று எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படவும். மன திருப்தி அற்ற நிலை ஏற்படலாம். பணியிடத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
குடும்ப விவகாரங்களில் நிதானம் தேவை. முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் சரியான ஆலோசனை தேவை. திருமண முயற்சிகளில் சில மன அழுத்ததைத் தரக்கூடியதாக இருக்கும்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் அற்புதமாக இருக்கும். இன்று உங்கள் தொழிலில் இருந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறி மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வேலையைத் தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். திருமண உறவுகளில் சச்சரவுகள் ஏற்படலாம். நீங்கள் ஈகோவை தவிர்த்து உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நாள். குழந்தைகளின் செயல் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை.