மொரட்டுவையில் காவல்துறை உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: 18 பேர் விளக்கமறியலில்

மொரட்டுவையில் காவல்துறை உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்ட சம்பவம்: 18 பேர் விளக்கமறியலில்

மொரட்டுவை - மாதங்கஹவத்த பகுதியில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான 18 பேரும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 10 பெண்களும் அடங்குவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இரண்டு தரப்பினருக்கு இடையேயான மோதல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று முன்தினம் இரவு குறித்த காவல்துறை உத்தியோகத்தர்கள் அங்கு சென்றிருந்தனர்.

இதன்போது காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மற்றுமொருவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.