சிப்பாய் கலகம்- செப். 20- 1857

சிப்பாய் கலகம்- செப். 20- 1857

இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி அல்லது சிப்பாய்க் கலகம் என்பது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியினை எதிர்த்து மே 10, 1857-ல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும். இக்கிளர்ச்சி பின்னர் இந்தியாவின் பல இடங்களிலும், குறிப்பாக இந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளில், பரவியது. பொது மக்கள் பலரும் இக்கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். முக்கிய கிளர்ச்சி இன்றைய உத்தரப் பிரதேசம், உத்தரகாண்டம், வடக்கு மத்தியப்

 

இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி அல்லது சிப்பாய்க் கலகம் என்பது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியினை எதிர்த்து மே 10, 1857-ல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும்.

இக்கிளர்ச்சி பின்னர் இந்தியாவின் பல இடங்களிலும், குறிப்பாக இந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளில், பரவியது. பொது மக்கள் பலரும் இக்கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். முக்கிய கிளர்ச்சி இன்றைய உத்தரப் பிரதேசம், உத்தரகாண்டம், வடக்கு மத்தியப் பிரதேசம், டெல்லி, மற்றும் குர்காவுன் ஆகிய இடங்களை மையம் கொண்டிருந்தது.

 


கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியப் படையினருக்கு ஒரு பெரும் சவாலாக விளங்கினர். செப். 20-ந்தேதி 1858-ல் குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் இது முடிவுக்கு வந்தது. இக்கிளர்ச்சி இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர் அல்லது சிப்பாய்க் கலகம் எனவும் அழைக்கப்படுகிறது.

ஜூலை 10, 1806-ல் தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சி. திப்பு சுல்தான் 1799-ல் இறந்த பின்னர் ஆங்கிலேயர்கள் திப்புசுல்தானின் குடும்பத்தாரை வேலூர் கோட்டையில் சிறை வைத்திருந்தனர். அங்கே, சீராடை பற்றிய புதிய சட்டத்தை எதிர்த்தவர்களை ஆங்கிலேயர் தண்டித்ததை அடுத்து ஒரு திட்டமிட்ட எழுச்சி நடந்தது. இதில் அங்கிருந்த 350 ஐரோப்பியரில் 100 பேர் கொல்லப்பட்டனர். இதுவே முதல் இந்திய விடுதலைக்கான எழுச்சி எனப்படுகின்றது. இதன் 200-வது ஆண்டு நினைவாக இந்திய அஞ்சலகம் ஒரு நினைவு அஞ்சல் தலையை 2006-ம் ஆண்டு ஜுலை 10-ந்தேதி வெளியிட்டுள்ளன.