81 வயதான முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம் பெண்! வைரலாகும் புகைப்படம்

81 வயதான முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம் பெண்! வைரலாகும் புகைப்படம்

சீனாவில் ஹெபே மாகாணத்தில் 23 வயதான இளம் பெண்ணொருவர் 81 வயதான முதியவரை திருமணம் செய்துகொள்ள போவதாக தெரிவித்த விடயம் பெரும் அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹெபே மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் பணிபுரிந்த 23 வயதான் ஜியாபாங்க் என்ற பெண், அங்கு லீ என்ற முதியவரை சந்தித்துள்ளார்.

81 வயதான முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம் பெண்! வைரலாகும் புகைப்படம் | 23 Year Old Woman Married An 81 Year Old Man China

பின்னர் இருவரும் அங்கு பேசி பழகி நெருங்கிய நண்பர்களாகிய நிலையில் இருவருக்கும் இடையில் இறுதியில் காதல் மலர்ந்துள்ளது.

இதனையடுத்து, அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஜியாபாங்க் குடும்பத்தினர் அவரது உறவை ஏற்கவில்லை என்ற போதிலும், லீயை திருமணம் செய்து கொள்வதற்காக அவர் தனது பெற்றோருடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டுள்ளார்.

அண்மையில் லீ-ஜியாபாங்க் ஜோடி குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மத்தியில் எளிய முறையில் திருமணம் செய்துகொண்டனர். 

81 வயதான முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம் பெண்! வைரலாகும் புகைப்படம் | 23 Year Old Woman Married An 81 Year Old Man China

இந்த ஜோடியின் ரொமாண்டிக் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. 

முரண்பாடுகள் இருந்தபோதிலும், ஜியாபாங்க் தனது தாத்தாவின் வயதிற்குட்பட்ட ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

லீயுடன் எதுவும் சாத்தியம் என்று அவர் கூறியுள்ளார்.

லீயின் முதிர்ச்சி, நிலைப்புத்தன்மை மற்றும் ஞானம் ஆகியவற்றால் அந்த பெண் ஈர்க்கப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது.