இலங்கைக்கு சுற்றுலா வந்த உக்ரைன் யுவதிக்கு நேர்ந்த கதி

இலங்கைக்கு சுற்றுலா வந்த உக்ரைன் யுவதிக்கு நேர்ந்த கதி

கொழும்பிலிருந்து (Colombo) பதுளை (Badulla) நோக்கி சென்ற தொடருந்தில் பயணித்த வெளிநாட்டு உக்ரைன் யுவதி ஒருவர் தொடருந்து பாதையில் இருந்த சுரங்கத்தின் மீது மோதி படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (15.06.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 23 வயதுடைய உக்ரைனிய யுவதி ஒருவரே காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஒஹியா மற்றும் பட்டிபொல ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, காயமடைந்த குறித்த யுவதி, தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.