கடந்த ஐந்து மாதங்களில் சிறிலங்கா அராங்கம் பெற்ற கடன் எவ்வளவு தெரியுமா..!
இந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் மே இறுதி வரையான காலப்பகுதியில் அரசாங்கம் உள்நாட்டுச் சந்தையில் சுமார் 3,380 பில்லியன் ரூபா கடனாகப் பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகள் வெளிப்படுத்துவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.
குறித்த ஐந்து மாதங்களில் சுமார் 3,085 பில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்களில் இருந்தும் 795 பில்லியன் ரூபா திறைசேரி பத்திரங்களில் இருந்தும் கடனாக பெறப்பட்டுள்ளது.
ஜனவரியில் 878 பில்லியன் ரூபாவும், பெப்ரவரியில் 661 பில்லியன் ரூபாவும், மார்ச் மாதம் 843 பில்லியன் ரூபாவும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 720 பில்லியன் மற்றும் 779 பில்லியன் ரூபாவும் கடனாகப் பெறப்பட்டுள்ளது.
சராசரியாக ஒரு மாதத்தில் பெறப்பட்ட உள்ளூர் கடன்களின் தொகை 775 பில்லியன் ரூபாவை தாண்டியுள்ளதாகவும், ஒரு நாளில் பெறப்பட்ட கடன்களின் சராசரி தொகை சுமார் 25 பில்லியன் ரூபா எனவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன் பணம் இதுவரை பெற்ற ஏனைய கடன்களை அடைப்பதற்கு பெருமளவில் செலவழிப்பதாகவும் காட்டப்படுகிறது.