மோடியின் ஆட்சியில் பாரத மாதாவின் நிலம் சீனாவால் பறிக்கப்பட்டுள்ளது – ராகுல் காந்தி

மோடியின் ஆட்சியில் பாரத மாதாவின் நிலம் சீனாவால் பறிக்கப்பட்டுள்ளது – ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் பாரத மாதாவின் புனிதமான நிலம் சீனாவால் பறிக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

எல்லைப்பிரச்சினை தொடர்பில் சுயமான அமைப்பின் மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென ராகுல் காந்தி  உள்ளிட்ட இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ருவிட்டரில்  நாளேடு ஒன்றில் வெளியான கட்டுரையைப் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். குறித்த கட்டுரையில், “எல்லையில் சீன-இந்திய இராணுவ வீரர்கள் மோதல் விவகாரத்தில் ஊடகங்களை மத்திய அரசு தவறாக வழிநடத்திவிட்டதாக ஓய்வுபெற்ற இராணுவத்தினர் சிலர் கூறியதாகவும்  எல்லையில் நடந்த மோதல்  இந்தியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனை குறிப்பிட்டு ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில்,  “பிரதமர் மோடியின் ஆட்சியில் என்ன நடந்திருக்கிறது? பாரத மாதாவின் புனிதமான நிலம் சீனாவால் பறிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.