
வீதியில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட சிலர் தப்பியோட்டம்
கோப்பாய் - திருநெல்வேலி பகுதியில், சுகாதார நடைமுறைகளை மீறி, வீதியில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட சிலர், குறித்த பகுதிக்கு காவல்துறையினர் பிரவேசித்ததை அவதானித்ததை அடுத்து, மரக்கறிகளைக் கைவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
குறித்த இடத்தில், மரக்கறி வியாபாரம் செய்யவதற்கு கோப்பாய் காவல்றையினர் தடை விதித்துள்ளதுடன், கடந்த தினங்களில் அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டவர்களையும் வெளியேற்றியுள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.