கொரோனா என கூறி வீட்டைவிட்டு எஸ்கேப் ஆன புருஷன்… மனைவி செய்த காரியம்!

கொரோனா என கூறி வீட்டைவிட்டு எஸ்கேப் ஆன புருஷன்… மனைவி செய்த காரியம்!

கொரோனா வந்ததாக பொய் கூறி மனைவியிடம் கோவித்து சென்ற இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ஆஜஸ் அகமது ப்ளைவுட் தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

மனைவியிடம் இருந்து விலகி இருப்போம் முடிவு செய்து ஒரு வில்லங்கமான முடிவை எடுத்துள்ளார். தனக்கு கொரோனா பாசிடிவ்-ன்னு வீட்டில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார். 

அத்தோடு நிறுத்தியிருக்கலாம். பிசிஆர் டெஸ்ட் எடுத்துட்டேன் ரிப்போர்ட் வந்திருக்குன்னு வீட்டுல காட்டியிருக்கிறார்.

 

இளைஞருக்கு கொரோனா எல்லாம் இல்லை. அவரே பி.சி.ஆர் டெஸ்ட் மாதிரியை போலியாக உருவாக்கி வீட்டில் காட்டியுள்ளார்.

வேறு ஒருவருடைய ரிப்போர்டில் இருந்த பெயர் மற்றும் போட்டோவை நீக்கிவிட்டு அதனை போட்டோஷாப் செய்துள்ளார். நான் கொரோனா மையத்துக்கு சிகிச்சைக்கு போறேன்னு சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 

இந்த டெஸ்ட் ரிப்போர்ட் உதவியுடன் ஒருமாதம் மனைவியை விட்டு விலகியிருந்துள்ளார். அகமது வீட்டுக்கும் வரவில்லை. ஒரு மாசமாவா மனுஷனுக்கு கொரோனா இருக்குன்னு சந்தேகப்பட்ட மனைவி விவரத்தை அவரது தந்தையிடம் கூறியுள்ளார்.

மேலும் அந்த ரிப்போர்ட சந்தேகமா இருக்கு இது என்னன்னு விசாரிச்சுட்டு வாங்கன்னு கூற ஆஜஸ் அகமது தந்தை பிசிஆர் ரிப்போர்ட் எடுத்துக்கிட்டு நேரா லேப்-க்கே போய்விட்டார். அங்கு சென்றதும் மகனின் நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக லேப் டெக்னீசியன் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க இப்போது ஆஜஸ் வில்லங்கத்தை விலைக்கொடுத்து வாங்கிக்கொண்டார். தலைமறைவாக உள்ள அவரை போலீஸார் தேடி வருகின்றனர்